Udaintha pathiram naan Song Lyrics
Lyrics in Tamil
உடைந்த பாத்திரம் நான்
எதற்கும் உதவாதவன்
உருகுலைந்த பாத்திரம் நான்
எவரும் விரும்பாதவன்
குயவன் கையில்
பிசையும் களிமண் போல-2
என் சித்தமல்ல
உம்சித்தம் போலாக்கும் -2
1. அந்த உலக இன்பம் எல்லாம் மாயையே
உங்க விருப்பப்படி என்னை மாற்றுமே
என் பெலவீன காலங்களில்
உம் பெலத்தாலே பாதுகாக்கிறீர்
2. என்னை அறிந்த மனிதர் மறந்து போகலாம்
கிருபைஎன்மேல் என்றும் இருக்குமே,
என் அக்கிரமங்களை சிலுவையில் சுமந்தீர்
அபிஷேகத்தாலே மூழ்க நனைத்திட்டீர்
3. உன்னத பாத்திரம் நான்
உலகிற்கு ஒளியானவன்
தேவ அழகின் பாத்திரம் நான்
உம்மை விட்டு விலகாதவன்